





பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று (09/11/2020) நடைபெற்றது. தனிமனித இடைவெளியுடன் நடைபெற்ற கூட்டத்தில் 9,10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
சென்னையில் சில பள்ளிகள் விண்ணப்பங்களை பெற்றோர்களுக்கு வழங்கி, அதன் மூலம் கருத்துகள் பெறப்பட்டது. மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் வாய்மொழி மூலம் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்களின் கருத்துகளை பதிவு செய்த பள்ளிகள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கும். அதைத்தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்புவர். அதன்பிறகு பள்ளிகளைத் திறப்பது தொடர்பான இறுதி முடிவை தமிழக அரசு அறிவிக்கும்.
பெரும்பாலான பெற்றோர்கள் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, தகுந்த பாதுகாப்புடன் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.