கடந்த கல்வி ஆண்டுக்கான முழு ஆண்டு தேர்வு முடித்துவிட்டு தமிழக பள்ளிக் குழந்தைகள் கோடை விடுமுறையில் உள்ளனர். இதன்பின் இவர்களுக்கு வழக்கமாக ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும். இது வெயிலின் தாக்கத்தை பொறுத்து ஜூன் தொடக்கத்தில் அல்லது 10ஆம் தேதிக்கு மேல் பள்ளிகள் மீண்டும் திறக்கும்.
இந்நிலையில், கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.