tamilnadu school reopen june 7th minister anbil mahesh poyyamozhi 

Advertisment

திருச்சியில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக குடோனில் இன்று(26.05.2023) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாடநூல் கழகத்தலைவர் லியோனி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப்பின்னர் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி கோடை வெயிலை கருத்தில் கொண்டு ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள்திறக்கப்படும். பள்ளிகள் கோடை வெயிலின் தாக்கத்தால்காலதாமதமாக திறக்கப்படுவதால், பள்ளி வேலை நாட்களில் எண்ணிக்கையை சரி செய்ய மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு அந்த விடுமுறை நாட்கள் சரி செய்யப்படும்

தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயம் என்கிற அறிவிப்பு அறிவிப்போடு இல்லாமல் அதை அந்த அந்த பள்ளிகள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்வது எங்கள் கடமை, அதனால்தான் கல்வி அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இதை வலியுறுத்தி கூறி உள்ளேன்" என்று தெரிவித்தார்.