tamilnadu education board

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக திருப்புதல் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே இணையதளங்களில் கசிந்து வருகின்றன. 12ஆம் வகுப்பு கணித மற்றும் வணிகவியல் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் 10ஆம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த நிலையில், அது திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள இரு தனியார் பள்ளிகளில் இருந்து கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

இது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருள்செல்வம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment