இந்தியாவில் தற்போது கரோனாவின் இரண்டாம் அலை சற்று குறைந்துவருகிறது. இதற்கு மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய காரணம். அதேசமயம், கரோனாவில் இருந்து தற்காத்துகொள்வதற்கு தடுப்பூசியும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்தியாவில், தற்போதுவரை இரண்டு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாநிலங்கள் மத்தியரசிடமிருந்துதான் தற்போதுவரை தடுப்பூசிகளை பெற்றுவருகிறது. அதன்படி மத்திய அரசு வழங்கிய 6.9 லட்சம் பேருக்கு செலுத்தக்கூடிய கரோனா தடுப்பு மருந்து இன்று சென்னை வந்தது. அதனை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கில் வைக்கும் பணியை பார்வையிட்டார்.