தமிழக ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை ரூபாய் 1,000 மற்றும் இலவசப் பொருட்கள் விநியோகம் தொடங்கியது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியதால் அரிசி அட்டைகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படுகிறது.
டோக்கன், சுழற்சி முறையில் ரூபாய் 1,000 மற்றும் ரேஷன் பொருட்கள் தெருவாரியாக வழங்கப்படுகின்றன. சென்னையில் அட்டை எண் வரிசை மற்றும் தெருக்கள் வாரியாகப் பிரிக்கப்பட்டு கரோனா நிவாரணம் விநியோகம் செய்யப்படுகிறது. சுமார் 1.88 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தலா ரூபாய் 1,000 வழங்கப்படுகிறது.இதற்காக ரூபாய் 1,882 கோடி நிதியைத் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.