imd

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Advertisment

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்திற்கு இரண்டு நாட்களுக்கு'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் கனமழை நீடிக்கும். தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, அதேபோல், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனிடையே, சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் உள்ள முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.