Advertisment

'தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rains regional meterological centre in chennai

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அதேபோல், அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேத்பட்டில் (திருவண்ணாமலை)- 10 செ.மீ., பெரம்பூரில் (சென்னை) 5 செ.மீ மழை பதிவானது.

அக்டோபர் 18, 19- ஆம் தேதிகளில் ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அக்டோபர் 20- ஆம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதி, அந்தமான் கடல், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Centre Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe