Advertisment

'தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு'- வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rains regional meteorological centre

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, கோவை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Advertisment

அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

Chennai Regional Meteorological Centre Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe