tamilnadu rains regional meteorological centre in chennai

“ஆந்திரா, ஒடிஷா கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி, தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 9 செ.மீ., மாத்தூரில் 6 செ.மீ., நெய்வேலி, வேப்பூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Advertisment

அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்”இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.