Advertisment

'தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -வானிலை ஆய்வு மையம் தகவல்

tamilnadu rains regional meteorological centre in chennai

கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தேனி, நீலகிரி, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அடுத்த 72 மணி நேரத்தில் மதுரை, சிவகங்கை, கடலூர், கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மஞ்சளாறு (தேனி)- 9 செ.மீ., பர்லியாறு ( நீலகிரி)8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Centre Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe