TAMILNADU RAINS REGIONAL METEOROLOGICAL CENTRE IN CHENNAI

கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அதன்படி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருமயம் (புதுக்கோட்டை) தலா 5 செ.மீ., உசிலம்பட்டி (மதுரை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 4 செ.மீ.,ஆலங்குடி (புதுக்கோட்டை) 3 செ.மீ., மழை பதிவானது.

தமிழகத்தில் அக்டோபர் 28- ஆம் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment