தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், நாமக்கல்,விழுப்புரம், தருமபுரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகம், தெற்கு உள் கர்நாடகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாகவும், மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை (08/06/2020) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது