Advertisment

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

tamilnadu rains chennai regional meteorological centre in chennai

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகாரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Advertisment

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Regional Meteorological Centre Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe