/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MET3422_12.jpg)
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், உள்மாவட்டங்கள், காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல்- தனுஷ்கோடி வரை கடல் அலை 3.0 முதல் 3.6 மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)