/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MET3422_9.jpg)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rain 8999.jpg)
கடந்த 24 மணி நேரத்தில் தேவாலா (நீலகிரி)- 10 செ.மீ., சேலம், பந்தலூர் (நீலகிரி), தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு, கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)