Advertisment
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக மஞ்சளாறில் 11 செ.மீ, பெரிய குளத்தில் 10 செ.மீ, தல்லாகுளத்தில் 9 செ.மீ. மழை பதிவானது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.