/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai 4444.jpg)
தமிழகத்தில் கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர் உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உள்கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக காற்று வீசும் என்பதால் வடக்கு குஜராத் கடல், அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதிகபட்சமாக மதுரை தெற்கில் 8 செ.மீ, புதுக்கோட்டை காரையூரில்7 செ.மீ, வேலூரில் 6 செ.மீ. மழை பதிவானது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow Us