Advertisment

'ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு' -சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rains chennai meteorological centre

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தமிழக கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடம்பூர் (தூத்துக்குடி)- 8 செ.மீ., நெமூர் (விழுப்புரம்)- 4 செ.மீ., செஞ்சி (விழுப்புரம்), கல்லட்டி (நீலகிரி), திருமயம் (புதுக்கோட்டை) ஆகிய பகுதிகளில்தலா 2 செ.மீ மழையும்பதிவாகியுள்ளது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

Chennai Regional Meteorological Centre Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe