அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.