Published on 01/05/2020 | Edited on 01/05/2020

தமிழகத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மேற்குத்தொடர்ச்சி மலை, டெல்டா பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகாசி- 12, ஸ்ரீவில்லிப்புத்தூர்- 9 செ.மீ, நன்னிலம்- 7 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாகச் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்கான நீர்த்திறப்பு 1,000 கன அடியிலிருந்து 750 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.