தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இதனால் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திரா கடலோர பகுதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ வீசும்.அடுத்த மூன்று நாட்களுக்கு மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.