தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

tamilnadu rain 10 districts regional meteorological department

தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. 40- 50. கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதிகபட்சமாக தேவாலா, சின்ன கல்லார், கலசப்பாக்கம், வால்பாறையில் தலா 4 செ.மீ மழை பதிவானது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai rain Regional Meteorological Centre Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe