Advertisment

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் தேர்வு

election

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமையன்று தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisment

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் செ.போத்திலிங்கம், துணை ஆணையாளர்களாக முன்னாள் மாநில துணைத் தலைவர் எஸ்.ஜேம்ஸ்ராஜ், முன்னாள் மாநிலச் செயலாளர் அ.சுவாமிநாதன் ஆகியோர் செயல்பட்டனர்.

Advertisment

இதில் மாநிலத் தலைவராக மூ.மணிமேகலை, பொதுச் செயலாளராக ச.மயில், பொருளாளராக க.ஜோதிபாபு, துணைப் பொதுச் செயலாளராக தா.கணேசன், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினராக ச.மோசஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், துணைத் தலைவர்களாக இரா.மலர்விழி, டி.அக்சிலியாபெர்லின் உஷ், தோ.ஜோசப்ரோஸ், ஆர்.தமிழ்ச்செல்வி, தோ.ஜான்கிறிஸ்துராஜ், பெ.அலோசியஸ் துரைராஜ், சி.ரஹீம், செயலாளர்களாக டி.மல்லிகா, சோ.முருகேசன், டி.முருகன், வி.ஹேமலதா, இ.வின்செண்ட், ஜி.பிரசன்னா, எஸ்.சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திப் பொருளாளர் தி.கண்ணன், சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் செ.பாலச்சந்தர், முன்னாள் மாநிலப் பொருளாளர் ச.ஜீவனாந்தம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஏ.சங்கர் ஆகியோர் பேசினர்.

alliance elected primary school state administrators Tamilnadu teacher
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe