தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் சந்திப்பு

photographer

தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் டைம்ஸ் ஆப் இந்திய ராஜு தலைவராகவும், தி இந்து தமிழ் எல். சீனிவாசன் பொதுச்செயலாளராகவும், தினமலர் சிதம்பரம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணை தலைவராக விகடன் குழுமம் சு.குமரேசன் மற்றும் ராஜஸ்தான் ஹரிகிருஷ்ணன், துணைச் செயலாளராக நமது அம்மா ராஜேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

photographer

செயற்குழு உறுப்பினர்களாக நக்கீரன் ஸ்டாலின், தி இந்து பிரபு, மாலைச்சுடர் ஸ்ரீனிவாசன், டெக்கான் கிரானிக்கல் சஞ்சய், தினகரன் வினாயகம், நியூஸ் டுடே விஜயானந்த், விகடன் நாகமண், குமுதம் கணேஷ், தினகரன் பரணி, தீக்கதிர் ஜாபர்ஹூசேன் தினமலர் சத்தியசீலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

photographer

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஒயிடு ஆங்கின் ரவி, நடிகர் ஜீவி பிரகாஷ், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், ஓவியர் ஸ்ரீதர் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி, பதவியேற்பு நடத்தி வைத்தனர். மேலும் சங்கத் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தேர்தல் அதிகாரிகள் டைம்ஸ் ஆப் இந்தியா எல்.ஆர். சங்கர், குமுதம் செய்தில்நாதன், மாலைமுரசு இதயதுல்லா ஆகியோருக்கு பாராட்டி, நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

பல ஆண்டுகள் பத்திரிகைத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மூத்த புகைப்படக்கலைஞர்களுக்கு பாராட்டு விழாவும், நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

photographers
இதையும் படியுங்கள்
Subscribe