Skip to main content

தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் சந்திப்பு

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
photographer



தமிழ்நாடு பத்திரிகைப் புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைப்பெற்றது. இதில் டைம்ஸ் ஆப் இந்திய ராஜு தலைவராகவும், தி இந்து தமிழ் எல். சீனிவாசன் பொதுச்செயலாளராகவும், தினமலர் சிதம்பரம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

துணை தலைவராக விகடன் குழுமம் சு.குமரேசன் மற்றும் ராஜஸ்தான் ஹரிகிருஷ்ணன், துணைச் செயலாளராக நமது அம்மா ராஜேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

photographer


 

செயற்குழு உறுப்பினர்களாக நக்கீரன் ஸ்டாலின், தி இந்து பிரபு, மாலைச்சுடர் ஸ்ரீனிவாசன், டெக்கான் கிரானிக்கல் சஞ்சய், தினகரன் வினாயகம், நியூஸ் டுடே விஜயானந்த், விகடன் நாகமண், குமுதம் கணேஷ், தினகரன் பரணி, தீக்கதிர் ஜாபர்ஹூசேன் தினமலர் சத்தியசீலன், இந்தியன் எக்ஸ்பிரஸ் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

 

photographer



விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஒயிடு ஆங்கின் ரவி, நடிகர் ஜீவி பிரகாஷ், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகனகிருஷ்ணன், ஓவியர் ஸ்ரீதர் ஆகியோர் புதிய  நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கி, பதவியேற்பு நடத்தி வைத்தனர். மேலும் சங்கத் தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தேர்தல் அதிகாரிகள் டைம்ஸ் ஆப் இந்தியா எல்.ஆர். சங்கர், குமுதம் செய்தில்நாதன், மாலைமுரசு இதயதுல்லா ஆகியோருக்கு பாராட்டி, நினைவு பரிசும் வழங்கப்பட்டது. 

 

பல ஆண்டுகள் பத்திரிகைத்துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மூத்த புகைப்படக்கலைஞர்களுக்கு பாராட்டு விழாவும், நினைவு பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்க புகைப்படக் கண்காட்சி நிறைவு விழா (படங்கள்)

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாடமியில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கண்காட்சி தொடங்கியதில் இருந்து இன்றுவரை ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்கண்காட்சிக்கு வருகை தந்து புகைப்படக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்தனர். மேலும், இதழியல் மற்றும் காட்சித்தொடர்பியல் துறையில் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு கண்காட்சியில் பத்திரிகை துறை தொடர்பான வகுப்புகளும் நடப்பட்டன. கண்காட்சியின் நிறைவு விழா இன்று (17.02.2023) நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நக்கீரன் ஆசிரியர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களான அருண் ராம், ரஞ்சிதா குணசேகரன், கார்த்திகைசெல்வன் மற்றும் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

Next Story

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்க புகைப்படக் கண்காட்சி (படங்கள்)

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாதெமியில் இன்று (10.02.2023) தொடங்கியது. இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் தயாரித்திருந்த புகைப்படத் தொகுப்பு அடங்கிய புத்தகத்தை முதல்வர் வெளியிட, இந்து என்.ராம் பெற்றுக்கொண்டார்.  உடன் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, எழிலன் எம்.எல்.ஏ மற்றும்  வேலம்மாள் பள்ளி இயக்குநர் வேல்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் நக்கீரன் ஆசிரியர், நல்லி குப்புசாமி, ஆ.கே மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த புகைப்படக் கலைஞர்கள் தற்போது பணியாற்றும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழா நிறைவில் மாணவர்கள் கண்காட்சியில் உள்ள பல்வேறு புகைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.