Skip to main content

வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையாற்றிய அரசியல் பிரமுகர்கள் (படங்கள்)

Published on 19/02/2022 | Edited on 19/02/2022

 

 

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்பதால் வாக்குப்பதிவு மையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் காலை முதலே வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய மனைவியுடன் வந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தேனி பெரியகுளத்தில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினார். திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேருவும், கிராப்பட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷும், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதியும், விருகம்பாக்கத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையும், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியும், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனும், மதுரையில் அமைச்சர் மூர்த்தியும், கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவனும், செஞ்சியில் அமைச்சர் மஸ்தானும், சென்னை ஆலப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், விருகம்பாக்கம் வாக்குச் சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும், தி.நகரில் வி.கே.சசிகலாவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேனாம்பேட்டையிலும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையிலும், திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி தனது தாயாருடன் வந்து செயின்ட் எப்பாஸ் பள்ளியிலும் வாக்கு செலுத்தினர்.    

 


 

 

சார்ந்த செய்திகள்