Advertisment

'முழு ஊரடங்கை மீறினால் நடவடிக்கை' - காவல்துறை எச்சரிக்கை!

coronavirus prevention complete lockdown tamilnadu police

Advertisment

முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழக காவல்துறை நேற்று (13/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொடிய கரோனாதொற்று நோயைக்கட்டுப்படுத்துவதற்கு 10/05/2021 முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்தது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும், கரோனா பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளைக் கழுவுவது, தனிமனித இடைவெளியைக்கடைப்பிடிப்பதுமற்றும் இதர அறிவுரைகளை பொதுமக்கள் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

10/05/2021 முதல் இன்றுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் கடந்த நான்கு நாட்களாக ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் மூலமும் பொதுமக்கள் மேற்கூறிய அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரைகள் வழங்கிவந்துள்ளனர். இவ்வறிவுரைகளைப் பொதுமக்களில்ஒரு சிலர் சரியாகவும்ஒழுங்காகவும் பின்பற்றாததால் கொடிய தொற்று மேலும் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Advertisment

இன்று (14/05/2021) முதல் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தமிழக அரசின் அறிவுரைகளைப்பின்பற்றி, கரோனா தீவிரமாக பரவிவரும் இக்காலக்கட்டத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து பொதுமக்கள் தங்களைத் தவிர்த்துக்கொள்ளும்படி தமிழக காவல்துறை கேட்டுக்கொள்கிறது." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COMPLETE LOCKDOWN coronavirus prevention tn police
இதையும் படியுங்கள்
Subscribe