தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையத்துக்கும் மாதம் இவ்வளவு வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், அபராதம் வசூலிக்க வேண்டும் என்கிற டார்கெட்டை மாநில காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த பகுதி காவல்துறையினர் வாகனசோதனை நடத்தி அபராதம் விதிக்கின்றனர்.
இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. பொதுமக்கள் சாலை மறியல் செய்துள்ளனர், சிலயிடங்களில் பொதுமக்களை காவல்துறை கீழ்நிலை அதிகாரிகள் தாக்க பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களும் காவலர்களை தாக்கியும் உள்ளனர். இருந்தும் இந்த வாகன சோதனை என்பது நின்றதில்லை. காரணம், வாகன சோதனைக்கு செல்லும் போலிஸாருக்கு நன்றாகவே மாமூல் வாங்கி கல்லா கட்டுவதால் அவர்களும் இந்த சோதனையை விரும்புகின்றனர்.
வாகன சோதனையில் வாகன திருடர்களையோ, கொலை, கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடித்ததாக இதுவரை தகவலில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வாகன சோதனையில் ஈடுப்பட்ட காக்கி உடையில் இருந்தவர்கள் வியாபாரி ஒருவரிடம்மிருந்து 40 ஆயிரத்தை பறித்துக்கொண்டுள்ளனர். முறையான ஆவணங்களை தந்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள் எனச்சொல்லியுள்ளனர். அங்கு போனவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்துள்ளது.
வேலூர் மாவட்டம், வாலாஜா நகரம் வழியாக ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் எப்போதும் வாகன தணிக்கை நடைபெறும். ஏப்ரல் 27ந்தேதி மாலை திருநாவுக்கரசு என்கிற வியாபாரி 40 ஆயிரம் பணத்தோடு அந்த சாலையில் பணத்தோடு பயணம் செய்துள்ளார். காக்கி உடையில் இருந்த 3 பேர் சித்தூர் சாலையில் வாகனங்களை மடக்கி சோதனை செய்துள்ளனர். அதேபோல் இவரையும் மடக்கி சோதனை செய்துள்ளனர். அவரிடம்மிருந்து பணம் 40 ஆயிரத்தை பறிமுதல் செய்துக்கொண்டு வாலாஜா காவல்நிலையம் வந்து பணத்தை ஆவணத்தை காட்டி வாங்கிக்கொள் எனச்சொல்லியுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவரும் 27ந்தேதி இரவு வாலாஜா காவல்நிலையம் சென்றபோதே, அப்படி யாரும் தங்களது காவல்நிலையத்தில் இருந்து சென்று சோதனை நடத்தவில்லை என்கிற தகவலை சொல்ல அதிர்ச்சியாகியுள்ளார். தற்போது இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். அந்த புகாரையும் பதிவு செய்யாமல் வாலாஜா போலிஸார் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.
தங்களது காவல் எல்லைக்குள் காக்கி உடையணித்து பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையே கண்டுபிடிக்க முடியாத போலிஸார், தகிடுத்தத்தம் செய்தவர்களை எப்படி பிடிக்க போகிறார்களோ ?