tamilnadu police press release

Advertisment

சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழகத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது அமைதியைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட சில அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. அரசியல் நோக்கங்களுக்காகக் குறிப்பிட்ட அமைப்பினர் பெருந்திரளாகக் கூட்டம் கூட்டதிட்டமிட்டு, பிற அமைப்பினரைப் போல் தங்களைப் பாவித்து கூட்டம் கூட்டுவது சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும். போக்குவரத்து, பொது அமைதியைப் பாதிக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.