Advertisment

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் காவலர் உடற்தகுதி தேர்வு

tamilnadu police physical exam conducted in trichy

Advertisment

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்புத்துறை மற்றும் சிறைக் காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது.

இதில் 1052 தேர்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதில் முதல் கட்டமாக இன்று 400 பேர் மட்டும் பங்கேற்றனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் தேர்வு செய்யப்படக் கூடியவர்கள் உடல் தகுதி திறன் போட்டியில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்த பிறகு அடுத்த 2 நாட்கள் உடல் தகுதித்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன்மேற்பார்வையில்திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் இன்று காலை தொடங்கிய இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

trichy tnusrb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe