இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் வெளியே சுற்றிய 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 4.01 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 4,07,895 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,85,436 வழக்குகள் பதிவாகியுள்ளன.