tamilnadu plus 2 board exams chief minister mkstalin discussion with officers

Advertisment

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (02/06/2021) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (02/06/2021) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு பற்றி தமிழக முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். சிபிஎஸ்இ அறிவிப்புக்குப் பின் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது பற்றி முடிவு என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.