தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்க புகைப்படக் கண்காட்சி (படங்கள்)

தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘காலத்தால் கரையாத காட்சிகள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சிசென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித் கலா அகாதெமியில் இன்று (10.02.2023) தொடங்கியது.இக்கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து ரசித்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் தயாரித்திருந்த புகைப்படத்தொகுப்பு அடங்கிய புத்தகத்தை முதல்வர் வெளியிட, இந்து என்.ராம் பெற்றுக்கொண்டார். உடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர்பி.கே. சேகர்பாபு, எழிலன் எம்.எல்.ஏ மற்றும் வேலம்மாள் பள்ளி இயக்குநர் வேல்மோகன் ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் நக்கீரன் ஆசிரியர், நல்லி குப்புசாமி, ஆ.கே மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த புகைப்படக் கலைஞர்கள்தற்போது பணியாற்றும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். விழா நிறைவில் மாணவர்கள் கண்காட்சியில் உள்ள பல்வேறு புகைப்படங்களைக் கண்டு ரசித்தனர்.

Chennai exhibition journalists mk stalin photographers
இதையும் படியுங்கள்
Subscribe