துணை மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் கலந்தாய்வு!

தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகளுக்கு நாளை (10/09/2019) முதல் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

TAMILNADU PHARMACY, NURSING MEDICAL COURSE COUNSELING START FOR TOMORROW

தமிழகத்தில் துணை மருத்துவ துறை சார்ந்த படிப்புக்களான பார்மசி, நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் கலந்தாய்வு செப்டம்பர் 25- ஆம் தேதி வரை நடைபெறும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கலந்தாய்வு தொடர்பான முழு விவரங்களுக்கு https://tnmedicalselection.net/Default.aspx என்ற இணையதள முகவரியை அணுகலாம் என தெரிவித்துள்ளது.

Counseling MEDICAL COURSE NURSING START Tamilnadu tomorrow
இதையும் படியுங்கள்
Subscribe