Advertisment

மாலை 6 மணிக்கு அந்த மேடம் பேட்டிங்க! தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!

மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு போர்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் இந்தப் போர் ஒரு கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தொற்றுடன். உலகத்தை ஆட்டிப்படைக்கும் வல்லரசு நாடான அமெரிக்கா உட்பட பொருளாதார ரீதியாக உயர்ந்த நாடுகள் வரை இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறது.

Advertisment

 Tamilnadu people expectation -beela rajesh press meet

இந்தியாவில் இந்த வைரஸ் சென்ற மாதம் மார்ச்சில் தொடங்கி தற்போது வரைதொடர்ந்து தனது ஆளுமையை செலுத்தி வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டமாநிலமாக உள்ளது. அடுத்தது நமது தமிழகம் இரண்டாவது நிலையில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த வைரஸ் தாக்கம் பல்வேறு வடிவங்களில் வந்துள்ளது. அந்த மாநில அரசு இது எப்படி பரவுகிறது என மிகவும் ஆராய்ந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதன் பாதிப்பு தொடங்கியதிலிருந்து மாநில அரசும் சரி,அரசுத்துறை அதிகாரிகளும் மிகக் கூர்ந்து ஆராய்ந்து இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தங்களது துறை பணியாளர்களோடு போராடிவருகிறார்கள்.

இதில் மிக முக்கியமான துறை என்றால் அது தமிழக சுகாதாரத்துறைதான். இந்திய அளவில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் என இந்திய அரசு தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களை அறிவித்தது. அதில் ஒன்று சென்னை மற்றொன்று ஈரோடு. இந்த வைரஸ் தொற்று எப்படி இங்கே இருந்து பரவியது என தமிழக சுகாதாரத்துறை மிகவும் அர்ப்பணிப்போடு செய்த பணியில் பல்வேறு விபரங்களை புள்ளி விவரங்களோடு சேகரித்தது.

nakkheeran app

Advertisment

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்பு ஒரு சமூக பரவலாகி விடக்கூடாது என தமிழக பொது சுகாதாரத்துறை மிகவும் கவனத்தோடு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் இந்த நோய்த்தொற்று எவ்வளவு மக்களைபாதித்துள்ளதுஎன அறிவிப்பு செய்து வருவது தமிழக சுகாதாரத் துறையின் செயலாளர் திருமதி பீலா ராஜேஷ்தான். கடந்த 5 நாட்களாக ஒவ்வொரு நாள் மாலையிலும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களைசந்தித்துகரோனா பாதிப்பு குறித்த புள்ளிவிபரங்களை கூறிவருகிறார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதை தமிழக மக்கள் மிகவும் கவனத்தோடு பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஒவ்வொரு நாளும் 100 பேர், 50 பேர், 60 பேர் என்றகணக்கு அவர் மூலமாக வந்து கொண்டுள்ளது. சுகாதாரத்துறைசெயலாளர் பீலா ராஜேஷ் பேசும்போது, தமிழகம் இப்போது மூன்றாவது இடத்தில் இல்லை அதை தடுக்கத்தான் ஒட்டு மொத்த நிர்வாகமும் போராடி வருகிறது என கூறி வருகிறார். ஒவ்வொரு நாள் மாலையிலும் மக்கள் மத்தியில் சுகாதாரத்துறை செயலாளர் என்ன கூறுகிறார் என்றும், நோய்தொற்றுஇன்றுகுறைந்துவிட்டதா? சரி நாளை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரியதாக இருந்து வருகிறது.

அதே போல் மாலை 6 மணியானால் தொலைக்காட்சி முன்பு மக்கள் அமர்ந்து அவர்கூற இருக்கும் செய்தியைஎதிர்பார்க்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் பல்வேறு விஷயங்களில் வழக்கமாக கவனம் செலுத்துவார்கள். ஆனால் இன்றைய நிலையில் பெரு நகரத்திலிருந்து, சாதாரண குக்கிராமம் வரை ஒவ்வொரு நாள் மாலையும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், என்ன கூறுகிறார் என மக்கள் உற்று நோக்குகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கரோனா வைரஸ் பாதிப்பு மிகவும் குறைந்து விட்டது என்ற ஆறுதல் செய்தியை பீலா ராஜேஷ் சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

beela rajesh corona virus covid 19 Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe