tamilnadu parks reopening tamilnadu government

Advertisment

தமிழகத்தில் பூங்காக்கள் நாளை (01/09/2020) திறக்கப்படும் நிலையில், 'பூங்காக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி, "உடல் வெப்பப்பரிசோதனைக்கு பின்னரே பூங்காக்களில் மக்களை அனுமதிக்க வேண்டும். பூங்காக்களில் மாஸ்க் அணிவதுடன் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம். கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வருவோரை பூங்காக்களில் அனுமதிக்கக் கூடாது. பூங்காக்களில் தின்பண்டங்கள் விற்கவும், எடுத்துச் செல்லவும் அனுமதியில்லை. பூங்காக்களுக்குச் செல்வோர் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும்." இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.