வேலூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகளை பிரித்து திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து புதிய மாவட்டங்கள் எல்லை வரையறை, அரசு அலுவலகங்கள் அமைவிடம், தொகுதிகள் பிரிப்பு போன்ற அடிப்படை நிர்வாக பணிகளை கவனிக்க ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிறப்பு அதிகாரியாகவும், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சிவன் அருள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிறப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/DHIVYA DHARSHINI111.jpg)
அந்த இரு அதிகாரிகளும் இன்று தங்களது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். திவ்யதர்ஷினியை, ராணிப்பேட்டையில் உள்ள கூடுதல் ஆட்சியர் இளம்பகவத் ஐ.ஏ.எஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதேபோல், சிவன்அருள் திருப்பத்தூர் வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
Follow Us