தமிழக காவல்துறையின் சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் இன்று மாலையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே தமிழகத்தின் காவல்துறையின் புதிய தலைவராக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. இந்நிலையில் புதிய டி.ஜி.பியாக ஜே.கே.திரிபாதி டி.ஜி.பி. அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.. அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு டி.கே.ராஜேந்திரன் விடை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து டி.கே.ராஜேந்திரனுக்கு இன்று மாலை 04.00 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் வழியனுப்பு விழாவும், போலீஸ் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் உயர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொள்கிறார்கள்.