தேனி மாவட்டம் தென்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் கங்காதரன். இவர் தமிழக காவல்துறையில் 2009ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தல் பணிக்காக இன்று (01/10/2019)மாலை போலீஸ் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கோவில்பட்டி அருகே வந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

Advertisment

tamilnadu nanuguneri byelection police incident hospital

அவருடன் பணிக்கு வந்த காவலர்கள் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். போலீசாரின் விசாரணையில் குடும்ப தகராறில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கூறுகின்றன.