உள்ளாட்சித் தேர்தல் தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை உயரதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை செய்து வருகிறார். எனவே தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக அரசியல் கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.