அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியைப்பிடித்தம் செய்து தமிழக கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.செந்தில் பாலாஜி நிதியைத் தமிழக அரசு புறக்கணித்தது பற்றி ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் முதல்வர் இத்தகைய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்தத் தொகையை மாநில அளவில் பயன்படுத்தவும்,மாவட்டமாநில அளவில் மருத்துவ உபகரணம், மருந்து வாங்க, தடுப்பு நடவடிக்கைக்கு பணம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கரோனா பரவாமல் தடுக்க தினமும் 10 முதல் 15 முறை சோப்பால் கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று எஸ்எம்எஸ் மூலம் தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.