சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஆர்.பி. உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.