tamilnadu minister thangamani tests positive

Advertisment

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அமைச்சருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கரோனா உறுதியானதால் முதல்வர்- மத்திய அமைச்சர் சந்திப்பில் அமைச்சர் தங்கமணி பங்கேற்கவில்லை.

இதனிடையே இன்று (08/07/2020) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் தங்கமணி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தி.மு.க.வைச்சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க.-வைச் சேர்ந்த அமைச்சர்கள் இருவர் உள்பட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழனி குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.