Skip to main content

‘சினம் கொண்ட சிங்கம் நீ! கழகத்தின் உலகம் நீ!’ -வாழ்த்து மழையில் கே.டி.ராஜேந்திரபாலாஜி! 

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

முன்பெல்லாம் பிறந்தநாள் வருகிறதென்றால், கே.டி.ராஜேந்திரபாலாஜி  சிவகாசி தொகுதி பக்கமே தலைகாட்ட மாட்டார். ஏனென்றால், பிறந்தநாளன்று தொகுதிக்கு வந்து, ‘வாழ்த்துகிறேன்’ எனச்சொல்லி யாராவது வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிட்டால்,  தலைமையின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற பயம்தான். கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் இத்தனை கொண்டாட்டங்கள். அதுவும் இந்த ஆண்டு அமர்க்களப்படுத்திவிட்டார்கள் விருதுநகர் மாவட்ட ஆளும் கட்சியினர். செவ்வாய்க்கிழமை சென்னையில் இருக்கவேண்டிய நாள் என்றாலும், சிவகாசி தொகுதிக்கு வந்து அத்தனைபேரின் வாழ்த்துக்களையும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சிவகாசி அருகிலுள்ள ஈஞ்சார் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடும் நடத்தினார். 

 

tamilnadu minister rajendra balaji birthday meet cm edappadi palanisamy

 

விருதுநகர் மாவட்டம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மெகா சைஸில் வாழ்த்து பிளக்ஸ் பேனர்கள் வைத்திருக்கின்றனர். ‘எங்கள் மண்ணின் மன்னன் நீ.. கடாரம் வென்ற சோழன் நீ.. காலம் தாண்டி வாழ்வாய் நீ.. கழகத்தின் உலகம் நீ’ என்றெல்லாம் வாழ்த்து மழை பொழிந்துவிட்டனர். எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச்செம்மல் என்றால், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஆன்மீக செம்மல் பட்டம். 

 

tamilnadu minister rajendra balaji birthday meet cm edappadi palanisamy

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக நிர்வாகி ஒருவர் “முன்பெல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாளைத்தான் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அமைச்சர்களோ, இரண்டாம்கட்டத் தலைவர்களோ, வெகுவாக அடக்கி வாசிப்பார்கள்.  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா லேபிலும், இரட்டை இலைச் சின்னமும் கட்சியின் அடையாளமாக இருந்தாலும், இனிவரும் காலத்தில் தங்களுக்கும் ‘பப்ளிசிடி’ தேடிக்கொள்ள  வேண்டிய அவசியம் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் மட்டுமே விளம்பரப்படுத்தி,  திரைக்குப் பின்னால் முன்புபோல் நிற்பதற்கு யாரும் தயாராக இல்லை. பழைய பாணியில் செயல்பட்டால் கைப்பணத்தை செலவழிக்கும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு  என்ன பிரயோஜனம்? போட்டி நிறைந்த அரசியலில், தனது இடத்துக்கு இன்னொருவர் வர, அவர்களே வழிவகுத்தது போலாகிவிடும். இதையெல்லாம் மனதில் நிறுத்தியே, அதிமுக தலைவர்கள் காலத்துக்கு ஏற்றவாறு நடந்துகொள்கிறார்கள். 

 

tamilnadu minister rajendra balaji birthday meet cm edappadi palanisamy

 

சிவகாசி தொகுதி மீது கே.டி.ராஜேந்திரபாலாஜி என்னதான் அக்கறை காட்டினாலும், திட்டங்களை செயல்படுத்தினாலும், வரும் சட்டமன்ற தேர்தலில், டிடிவி தினகரனின் ஆதரவு நிலை எடுத்த 18 பட்டி மக்களில் பெரும்பாலானோர் இரட்டை இலைக்கு வாக்களிக்கும் மனநிலையில் இல்லை. இது தெரிந்தே, முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் இல்லாத விருதுநகர் தொகுதியைத் தனக்குப் பாதுகாப்பான தொகுதி என்றெண்ணுகிறார் ராஜேந்திரபாலாஜி. நாயக்கர், நாடார் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மெஜாரிட்டியாக உள்ள விருதுநகர் தொகுதியில், சாதி ரீதியாகத் தன்னை அன்னியப்படுத்திப் பார்க்காமல் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் வேர்விட்டிருக்கிறது. இப்போதெல்லாம்,  யாராவது வயதானவர்களைத் தன்முன் கொண்டு வந்து நிறுத்தினால், ‘இவங்கள்லாம் கட்சிக்காரங்கதான்.. ஆனா.. வயசாயிருச்சே.. இளைஞர்களைக் கூட்டிட்டு வாங்கப்பா.. அவங்கதான் ஓடியாடி கட்சி வேலை பார்ப்பாங்க..’என்று கணக்காகப் பேசுகிறார்.  இளைஞர்களை ஊக்குவிக்கவும் செய்கிறார்.” என்றார். 

 

tamilnadu minister rajendra balaji birthday meet cm edappadi palanisamy

 

 

இந்த நேரத்தில், 2012-ல் ஜெயலலிதா போட்ட  உத்தரவு ஏனோ நம் நினைவுக்கு வருகிறது. ’இனிவரும் காலங்களில் பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டும். மற்றபடி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். நிர்வாகிகள் படங்களை வெளியிட அனுமதி இல்லை.’ என்று அதிமுக தலைமை அப்போது கறாராக நடந்துகொண்டது.  

 

அது ஒரு காலம்; இது ஒருகாலம்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.