Advertisment

"டெல்டா பகுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்"- அமைச்சர் சக்கரபாணி பேட்டி!

tamilnadu minister pressmeet in dindigul district

Advertisment

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பிளியம்பட்டி கிராமத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா இரண்டாம் கட்ட நிவாரண நிதி மற்றும் 14 மளிகைப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி மற்றும் மாளிகைப்பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, கரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துள்ளனர் தமிழக அரசு சார்பில் கரோனா நிவாரண நிதி ரூபாய் 4,000, 14 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா பகுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் எங்கெல்லாம் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களோ, அங்கெல்லாம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் கொள்முதல் செய்கின்ற நெல்லுக்கு உடனடியாக பணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்களை கடந்த காலத்தில் ஐந்து, ஆறு நாட்கள் காத்திருந்து உள்ளனர். இனிமேல் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்றும் 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்து அந்த பணத்தை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்ய முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படடுள்ளது. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் மழைக் காலத்தில் நெல் சேதாரம் ஆகாமல் இருக்க பயன்படுத்தும் சைலோ முறையை இங்கு கொண்டு வந்து நவீன அரிசி ஆலைகள் தொடங்கப்படும்.

Advertisment

மக்களுக்கு தரமான அரிசி கொடுக்க வேண்டும். அதே போல் எடையும் சரியாக இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். விவசாயி நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என உணவுத்துறைக்கு முதல்வர் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். வரும் காலங்களில் விவசாயம் நலன் பாதுகாக்கப்படும். தமிழகத்தில் 2 கோடியே 9 லட்சம் பேர் குடும்ப அட்டை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு வேண்டிய தரமான அரிசி வழங்கப்படும்.டெல்டா பகுதியில் கேட்கிற இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்; இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

pressmeet minister Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe