tamilnadu minister mrk panerselvam pressmeet at chennai

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வருடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "காவல்துறையினர் தடுத்து நிறுத்தினால் காய்கறி, பழ வியாபாரிகள் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்குப்புகார் தரலாம். 044-4568 0200, 94999 32899 என்ற எண்களில் மூன்றுசக்கர வாகனம், தள்ளுவண்டி வியாபாரிகள் புகாரளிக்கலாம். தமிழகத்தில் நேற்று (24/05/2021) ஒரே நாளில் வாகனங்கள் மூலம் 4,900 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் அரசு சார்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் வாகனங்கள் மூலம் நேற்று (24/05/2021) 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனையாகியுள்ளன. நகரங்கள் மட்டுமின்றிக் கிராமப்பகுதிகளிலும் காய்கறிகள், பழங்களை விற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். காய்கறிகள், பழங்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். முழு பொதுமுடக்கக் காலத்தில் தட்டுப்பாடின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. விவசாயிகள் வேளாண் பொருட்களை எடுத்துச் செல்ல எந்தத் தடையும் இல்லை" எனத் தெரிவித்தார்.

Advertisment