Skip to main content

"கேரளாவையொட்டிய இடங்களில் 100% தடுப்பூசிக்கு இலக்கு"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

 

TAMILNADU MINISTER MEET UNION HEALTH MINISTER TODAY


டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (03/09/2021) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கேரள மாநில எல்லையையொட்டிய மாவட்டங்களில் 100% கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி உற்பத்தி மையங்களைத் திறக்கப் பேசி முடிவெடுக்கலாம் என்றார்கள். தமிழகத்தில் தடுப்பூசிப் போடும் பணியை ஒன்றிய அரசு பாராட்டியது. செப்டம்பருக்கு 1.04 கோடி தடுப்பூசித் தர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மாதத்துக்கு 2 கோடி தடுப்பூசிப் போடத் தமிழகத்தால் முடியும். ஆகஸ்ட் மாதத்தில் 34 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள் தரப்பட்டன. புதிதாக 25 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைப்பது தொடர்பாகவும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் 95% ஆசிரியர்களுக்கு தடுப்பூசிப் போடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்