TAMILNADU MINISTER MANIAN WIFE INCIDENT

தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

Advertisment

அமைச்சர் ஓ.எஸ்,.மணியனின் மனைவி மறைவுக்கு அ.தி.மு.க சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

TAMILNADU MINISTER MANIAN WIFE INCIDENT

தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "அமைச்சர் மணியனின் மனைவி உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். துணைவியாரை இழந்துவாடும் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

TAMILNADU MINISTER MANIAN WIFE INCIDENT

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அமைச்சரை தொலைபேசியில் அழைத்து எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment