/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kamaraj 32444 (1).jpg)
அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கரோனா தொற்றுக் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Follow Us